இந்தியா

பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்த 4 மாநிலங்கள்: தமிழக அரசும் குறைக்குமா?

Published

on

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் பெட்ரோல் மீதான வரிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் குறைக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன

இந்த நிலையில் முன்னுதாரணமாக நான்கு மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்து உள்ளதால் அந்த மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது. இதனை அடுத்து தமிழக அரசும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது

கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த 10 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது. ஆனால் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பை விட மத்திய மாநில அரசுகளின் வரிகள் தான் பெட்ரோல் விலையை மிகப்பெரிய அளவில் உயர்த்தி இருப்பதாகவும் எனவே உடனடியாக மத்திய மாநில அரசுகள் வரியை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை ராஜஸ்தான், மேற்கு வங்காளம், அசாம் மற்றும் நாகலாந்து ஆகிய நான்கு மாநிலங்களை குறைத்துள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் 38 சதவீத லிருந்து 36 சதவீதமாகவும் மேற்கு வங்க மாநிலத்தில் மதிப்புக்கூட்டு வரி ஒரு ரூபாயும் அசாம் மாநிலத்தில் ஐந்து ரூபாயும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதேபோல் நாகலாந்து மாநிலத்திலும் பெட்ரோல் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் விரைவில் தேர்தல் வர உள்ளதை அடுத்து வாக்காளர்களின் வாக்குகளை கவர்வதற்காக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தமிழக அரசு குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளில் மட்டும் தமிழக அரசுக்கு 13,000 கோடி ரூபாய் வருவாய் வந்து கொண்டிருக்கும் நிலையில் வரியை குறைக்குமா? தமிழக அரசு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version