தமிழ்நாடு

தமிழகத்தில் 4 புதிய இரட்டை ரயில் பாதைகள்: பணிகள் தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சி!

Published

on

தமிழகத்தில் தற்போது சென்னை – மதுரை, சென்னை – கோவை ஆகிய இரண்டு இரட்டை ரயில் பாதைகள் மட்டுமே இருக்கின்றன என்பதும் அது மட்டுமின்றி மதுரை – கன்னியாகுமரி என்ற இரட்டை ரயில் பாதை பணி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் மேலும் நான்கு புதிய இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கான பணிகளை தெற்கு ரயில்வே தொடங்கி உள்ளதால் தமிழக மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மக்கள் தொகையின் அடிப்படையில் ஒரு சில ரயில் பாதைகளை இரட்டை ரயில் பாதையாக மாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அரசியல் கட்சிகளும் இதனை மத்திய ரயில்வே துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்த கோரிக்கை நிறைவேற்றப்படுகிறது. தமிழகத்தில் நான்கு முக்கிய ரயில் பாதைகளான திருச்சி – ஈரோடு, சேலம் – கரூர், கரூர் – திண்டுக்கல், விழுப்புரம் – காட்பாடி ஆகிய வழித்தடங்களில் இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கான பணிகளை தெற்கு ரயில்வே தற்போது தொடங்கியுள்ளது.

இதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த ஆய்வு பணிகளை 6 மாதத்தில் முடிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாகவும் இந்த ஆய்வுப்பணிகள் முடிக்கப்பட்டு அந்த ஆய்வுகளின் முடிவின் அடிப்படையில் மத்திய பட்ஜெட்டில் இந்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருச்சி – ஈரோடு, சேலம் – கரூர்,கரூர் – திண்டுக்கல், விழுப்புரம் – காட்பாடி ஆகிய நான்கு புதிய இரட்டை ரயில் பாதை பணிகள் முழுமை அடைந்தால் ரயில் பயணிகள் மற்றும் வணிகர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் தர்மபுரி – மொரப்பூர், ஈரோடு – பழனி ஆகிய பாதைகளையும் இரட்டை ரயில் பாதையாக மாற்ற வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Trending

Exit mobile version