இந்தியா

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமைக்ரான்: அதிர்ச்சியில் மத்திய அரசு!

Published

on

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமைக்ரான் என்ற கொடிய வகை வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது என்பதும் குறிப்பாக பிரேசில் ஹாங்காங் உள்ளிட்ட சில நாடுகளில் மிக வேகமாக பரவி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் பரவாமல் தடுக்க அனைத்து விமான நிலையங்களிலும் சோதனை கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் இந்தியாவிலும் ஒமைக்ரான் பரவாமல் தடுக்கும் வகையில் அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்துக்கு வந்த நான்கு வெளிநாட்டு பயணிகளுக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் மத்திய அரசு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. 2 பெண்கள் உள்பட 4 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அந்த வெளிநாட்டினர் நால்வரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அந்த நான்கு பேர்களும் சுற்றிவந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கும் சோதனை செய்ய உத்தர பிரதேச மாநில சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் தற்போது இந்தியாவிற்குள் நுழைந்து விட்டது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

seithichurul

Trending

Exit mobile version