தமிழ்நாடு

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திடீர் மூடல்: என்ன காரணம்?

Published

on

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் திடீரென டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் குடிமகன்கள் கடும் அவதிப்பட்டு உள்ளனர் என்பது தெரிய வருகிறது.

சென்னை, காஞ்சிபுரம், திண்டுக்கல், தேனி உள்பட ஒருசில மாவட்டங்களில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரகடம் என்ற பகுதியில் டாஸ்மாக் கடையில் பணிபுரியும் விற்பனையாளர்கள் துளசிதாஸ் மற்றும் ராம் ஆகியோர் நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற போது, அடையாளம் தெரியாத நபர்களால் அறிவாளால் தாக்கப்பட்டனர்.

இதில் துளசிதாசர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், ராம் என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் முதல் கட்ட விசாரணையில் டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் இருந்து பணத்தை வழிப்பறி செய்யவே இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கிய மர்ம நபரை கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன.

அதேபோல் சென்னையில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாகவும் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்ததால் பக்கத்து மாவட்டங்களுக்கு சென்று டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபிரியர்கள் வாங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version