தமிழ்நாடு

கனமழை எதிரொலி: 4 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் விடுமுறை!

Published

on

சென்னையில் நேற்று பெய்த திடீர் மழை காரணமாக சென்னையின் பல சாலைகள் வெள்ளத்தில் தத்தளித்தன என்பதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சென்னையில் பெய்த கனமழை காரணமாக இன்று நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் அதே போல் நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

சென்னையில் திடீரென நேற்று பெய்த வரலாறு காணாத மழை காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்தது என்பதும் பல வாகனங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை அலுவலகம் முடிந்து பலர் நள்ளிரவுக்கு மேல் தான் வீடு திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் சென்னையில் உள்ள பல சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதை அடுத்து இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது அதேபோல் மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பாராமல் பெய்த திடீர் மழை காரணமாக இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மழை காரணமாக தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version