தமிழ்நாடு

4 மாநகராட்சி ஆணையர்கள் திடீர் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

Published

on

தமிழகத்தில் திமுக ஆட்சியை தொடங்கியதிலிருந்தே பல்வேறு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். தலைமைச் செயலாளர்கள் உள்பட பல ஐஏஎஸ் அதிகாரிகளும் அதேபோல் பல காவல்துறை உயரதிகாரிகளும் மாற்றப்பட்டு வரும் நிலையில் வட்டாட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களும் மாற்றப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மேலும் நான்கு மாநகராட்சி ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், ஆவடி ஆகிய நகரங்களை சேர்ந்த மாநகராட்சி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக சரவணகுமார்,திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக சிவசுப்பிரமணியம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் திருச்சி மாநகராட்சி ஆணையராக முஜிபூர் ரஹ்மான், ஆவடி மாநகராட்சி ஆணையராக சிவகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் சென்னை மாநகராட்சி துணை ஆணையர்கள் மற்றும் மதுரை, கோவை, நெல்லை, சேலம், திருப்பூர் மாநகராட்சி ஆணையர்கள் உட்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மேலும் சில நகராட்சி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பு ஒரு சில நாட்களில் வெளிவரும் என்றும் தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

Trending

Exit mobile version