வணிகம்

மத உணர்வுகளை பாதிக்கும் விளம்பரம்.. மன்னிப்பு கேட்ட ஃபார்ச்யூன்..!

Published

on

ஃபார்ச்யூன் ஃபுட்ஸ் நிறுவனம் அன்மையில் செய்த விளம்பரத்தில் துர்கா பூஜையின் போது அசைவ உணவு சமைப்பது போன்று செய்யப்பட்ட விளம்பரத்தினால் மத உணர்வுகள் பாதிப்படைந்துள்ளதாகப் புகார்கள் எழுந்தது.

பல மத ரீதியான அமைப்புகள் இந்த விளம்பரம் நவராத்திரி சமயத்தில் அசைவம் சமைப்பது போன்று விளம்பரம் செய்துள்ளது தங்களது உணர்வுகளைப் புண்படுத்துவதாகப் புகார் அளித்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் இது போன்ற விழாக்காலங்களில் அசைவம் சாப்பிடும் பழக்கம் உள்ளதால் அங்குத் தவிரப் பிற இடங்களில் இருந்து இந்த விளம்பரத்தினை நீக்குகிறோம் என்று ஃபார்ச்யூன் ஃபுட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் மத உணர்வுகளைப் பாதித்து இருந்தால் மன்னிப்புக் கேட்கிறோம் என்றும் ஃபார்ச்யூன் ஃபுட்ஸ் தெரிவித்துள்ளது.

ஃபார்ச்யூன் ஃபுட்ஸ் நிறுவனம் எண்ணெய், அரசி போன்ற பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இது அதானி குழுமத்தின் கீழ் வரும் ஒரு துணை நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version