இந்தியா

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

Published

on

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் சற்று முன் உடல்நலக் கோளாறு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மன்மோகன் சிங் உடல்நிலை குறித்து இன்னும் சில நிமிடங்களில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிடும் என்றும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்த விபரங்களை தெரிவிக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து வெளிவந்த செய்தியின்படி மன்மோகன்சிங் அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என்றும் கூறப்படுகிறது.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version