உலகம்

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப் காலமானார்!

Published

on

பாகிஸ்தானின் அதிபராக 2001-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை இருந்து வந்த ஜெனரல் பர்வேஸ் முஷாரப் துபாயில் காலமானார்.

1999-ம் ஆண்டு, மே மாதம் 3-ம் தேதி முதல் ஜூலை 26-ம் தேதி வரை நடைபெற்று வந்த இந்தியா – பாகிஸ்தான் கார்கில் போரை தூண்டிய நபராக முஷாரப் கருதப்படுகிறார்.

2001-ம் ஆண்டு இவர் செய்த சதியால், அப்போது பாகிஸ்தான் பிரதமராக இருந்து வந்த நவாப் ஷரீப் கைது செய்யப்பட்டு இவர் அதிபராக பொறுப்பேற்றார்.

2001, ஜூன் 21-ம் தேதி முதல் 2008, ஆகஸ்ட் 18 வரை வரை பாகிஸ்தானின் பிரதமராக இருந்து வந்த ஜெனரல் பர்வேஸ் முஷாரப், பல்வேறு காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டார்.

தீவிரவாதத்தை ஊக்குவித்த காரணத்துக்காக 2019-ம் ஆண்டு இவருக்குத் தூக்கு தண்டை வழங்கப்பட்டது. ஆனால் சில காரணங்களுக்காக அது நீக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.

#image_title

கடந்த சில ஆண்டுகளாகத் துபாயிலிருந்து வந்த முஷாரப் நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

seithichurul

Trending

Exit mobile version