இந்தியா

கொரோனா பரவலை தடுப்பது எப்படி? பிரதமருக்கு 5 ஆலோசனைகள் கூறிய மன்மோகன்சிங்

Published

on

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கடந்த 24 மணிநேரத்தில் 2.75 லட்சம் பேர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து 5 ஆலோசனைகளை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் இந்நாள் பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் குறிப்பிட்ட காலத்திற்குள் தடுப்பூசி போட அரசு நிர்ணயம் செய்ய வேண்டும், அதற்கு முன்னதாக தேவையான அளவு தடுப்பு ஊசி மருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி மருந்துகளை அனைத்து மாநிலங்களும் வினியோகம் செய்ய வேண்டும், 10 சதவீத மருந்துகளை மத்திய அரசு தன் வசம் வைத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார், முன் களப்பணியாளர்கள் யார் என்பதை அறிய 45 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும் என்றும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் தடுப்பூசி மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை அதிகரிக்க தேவையான நிதி சலுகைகளையும் வழங்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடியிடம் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version