இந்தியா

முன்னாள் பிரதமர் தேவகெளடாவுக்கு கொரோனா: டுவிட்டரில் தகவல்

Published

on

முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கும் அவருடைய மனைவி சென்னம்மாள் என்பவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 97 ஆம் ஆண்டு வரை இந்திய பிரதமராக இருந்தவர் தேவகவுடா. அவர் கர்நாடக மாநிலத்தின் முதல்வராக இருந்து உள்ளார் என்பதும் இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தேவகவுடாவுக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவருடைய மனைவி சென்னம்மாள் என்பவருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து தனது டுவிட்டரில் ’எனக்கும் என்னுடைய மனைவி சென்னம்மா அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து நாங்கள் இருவரும் எங்கள் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களிடம் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டோம். மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறோம். எங்களுக்கு வேறு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. நாங்கள் நலமுடன் இருக்கிறோம். எனவே யாரும் கவலைப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு கொரோனா என்ற தகவல் அறிந்ததும் அவருடைய கட்சியினர் அவர் விரைவில் குணமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version