சினிமா செய்திகள்

’தலைவி’ படத்தில் பொய்யான காட்சிகள்: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கண்டனம்!

Published

on

இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத், அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு ஒரு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் இன்று அளித்த பேட்டியில் ’புரட்சித் தலைவர் எம்ஜிஆரை பொறுத்தவரை பதவிக்கு அவர் என்றும் ஆசைப்பட்டதே கிடையாது. அறிஞர் அண்ணா அவர்களே எம்ஜிஆர் அவர்களை அழைத்து கேபினட் அந்தஸ்துள்ள பதவியைக் கொடுத்தார். ஆனால் ‘தலைவி’ படத்தில் எம்ஜிஆர், அமைச்சர் பதவி கேட்பது போலவும் அதற்கு கருணாநிதி அவர்கள் மறுப்பு தெரிவிப்பது போலவும் காட்சி உள்ளது. இது உண்மை அல்ல.

மேலும் எம்ஜிஆருக்கு தெரியாமல் ஜெயலலிதா அவர்கள் இந்திரா காந்தி அம்மையாரிடமும் ராஜீவ் காந்தி அவர்களுடனும் அரசியல் ரீதியாக தொடர்பு வைத்துள்ளதாக இந்த படத்தில் காட்சிகள் சித்தரித்துள்ளது. எம்ஜிஆருக்கு எதிராக ஜெயலலிதா செயல்பட்டது போன்ற காட்சியை உண்மை அல்ல. இந்த காட்சிகளை இயக்குனர் நீக்கிட வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும் சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியபோது, ‘சசிகலாவை பொருத்தவரை அவர் ஜெயலலிதாவுக்காக பணி செய்ய வந்தவர். அவருக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால் ‘தலைவி’ படத்தில் வேறு மாதிரி காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது என்று கூறினார்.

மேலும் தலைவி படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் நீங்கள் நடிப்பீர்களா? என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ’இந்த உலகமே ஒரு நாடக மேடை, அதில் நாம் எல்லோருமே அவரவர் கேரக்டரில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறோம்’ என்று கூறி காமெடியாக கூறினார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version