தமிழ்நாடு

தண்டனை அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் நெஞ்சுவலி: மருத்துவமனையில் இந்திரகுமாரி!

Published

on

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனையும் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் அதிமுக அமைச்சர் இந்திரகுமாரி அவர்கள் கடந்த 1991 முதல் 96 வரை சமூக நலத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவரது அமைச்சரவையின் கீழ் ஒரு அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டு அந்த அறக்கட்டளையில் ரூபாய் 15.45 லட்சம் முறைகேடு செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் இந்திரகுமாரி மற்றும் அவரது கணவர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. சென்னை சிறப்பு நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பை அடுத்து இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை அடுத்து சிகிச்சைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து இந்திரகுமாரி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அவருக்கு தற்போது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை என தண்டனை அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version