இந்தியா

ஐசிஐசிஐ முன்னாள் தலைவர் சாந்தா கோச்சா கணவருடன் கைது.. என்ன காரணம்?

Published

on

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் ஆகியோர்அதிரடியாக சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சிஇஓ மற்றும் மேனேஜிங் டைரக்டர் ஆக இருந்தவர் சாந்தா கொச்சார் என்பதும் அவருடைய காலத்தில் பதவியை தவறாக பயன்படுத்தி விதிமுறைகளை பின்பற்றாமல் வீடியோகான் குடும்பத்திற்கு ரூ.3650 கோடி ரூபாய் கடன் வழங்கினார் என்றும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும் இந்த கடன் தொகையை சாந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் நடத்திவந்த நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதாகவும் இதனை அடுத்து வீடியோகான் நிறுவனத்திற்கு திரும்பி வராத கடனாக அளிக்கப்பட்டதாகவும் சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து கடந்த 2008ஆம் ஆண்டு சந்தா கோச்சார் பொது விசாரணை தொடங்கிய நிலையில் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் வீடியோகான் மேனேஜிங் டைரக்டர் வேணுகோபால் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில் சாந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாருக்கு சொந்தமான கோடிக்கணக்கான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி வைத்தது.

இந்த நிலையில் ஐசிஐசிஐ முன்னாள் தலைமை இயக்குநர் சந்தா கோச்சார் அவரது கணவர் தீபக் ஆகிய இருவரையும் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு மோசடி வழக்கில் சாந்தா கோச்சாரை அமலாக்கத் துறையினர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version