தமிழ்நாடு

தமிழக முதல்வரை சந்தித்தார் ப.சிதம்பரம்: என்ன காரணம்?

Published

on

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட முக ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக பல அரசியல் மற்றும் தொழிலதிபர்கள் சந்தித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சற்று முன்னர் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் பிரமுகருமான ப சிதம்பரம் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை ப சிதம்பரம் சந்தித்து பேசியதாக தகவல் வெளிவந்துள்ளது. இருப்பினும் இரு தலைவர்களும் தமிழகத்தின் தற்போதைய நிலை குறித்து ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளை ப சிதம்பரம் அவர்கள் சமீபத்தில் பாராட்டு தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக டாஸ்மாக் கடைகள் திறக்காமல் அரசை நடத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறி டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறந்ததற்கு தனது ஆதரவை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்களை சிதம்பரம் அவர்கள் சந்தித்துள்ளது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Trending

Exit mobile version