கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணிக்கு எச்சரிக்கை விடுத்த மைக்கேல் வான்!

Published

on

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி விளையாடும் பாணி தவறானது என்றும் இதே ரீதியில் விளையாடினால் 2023-ம் ஆண்டில் நடைபெறும் உலக கோப்பையில் அந்த அணி மிகப் பெரிய விலை கொடுக்க நேரிடும் என்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலிய தொடரிலும், தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் இங்கிலாந்து தொடரிலும், இந்திய அணி ஒரு குறிப்பிட்ட பாணியை கடைப்பிடிக்கிறது. அதாவது முதல் 40 ஓவர்களில் எச்சரிக்கை உணர்வோடு விக்கெட் விழாமல் விளையாடும் இந்திய அணி கடைசி 10 ஓவர்களில் ஆக்ரோஷமாக விளையாடுகிறது.

இந்த பாணி ஒருசில போட்டிகளுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கலாம் ஆனால் உலக கோப்பையில் இதே பாணியில் விளையாடினால் அந்த அணி மிகப் பெரிய விலை கொடுக்க நேரிடும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

பேட்டிங்கில் சாதகமாக உள்ள ஆடுகளத்தில் தொடக்கத்திலிருந்தே ஆக்ரோஷமாக ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவ்வாறு ஆடியதால் தான் 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 337 என்ற இலக்கை அடைந்து வெற்றி பெற்றது என்றும் இந்த அணுகுமுறையை இந்திய அணி மாற்றாவிட்டால் அந்த அணி சொந்த மண்ணில் நடக்கும் உலக கோப்பையின் போது மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version