தமிழ்நாடு

குழந்தை என்று பிறந்ததோ அன்றுதான் பிறந்தநாள்: ‘தமிழ்நாடு தினம்’ குறித்து ஓ.பி.எஸ்

Published

on

குழந்தை என்று பிறந்ததோ அன்று தான் பிறந்த நாள் கொண்டாடப்படும் என்றும் பெயர் வைக்கும் நாளில் பிறந்த தினம் கொண்டாடப்பட மாட்டாது என்றும் தமிழ்நாடு தினம் குறித்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கருத்து கூறியுள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் திடீரென சமீபத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு தினம் கொண்டாடப்படும் என அறிவித்தார்.மேலும் இது குறித்து அரசாணை விரைவில் வெளியாகும் என்று அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு வைகோ உள்ளிட்ட ஒருசில தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வந்தாலும் பாஜக மற்றும் அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு குழந்தை என்று பிறந்ததோ அன்று தான் பிறந்த நாள் கொண்டாட வேண்டும் என்றும், பெயர் வைத்த நாளை பிறந்த நாளாகக் கொண்டாடுவது இல்லை என்றும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் அறிவித்திருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்ட செயல் என்றும் பத்து வருடங்கள் கழித்து குழந்தையின் பெயர் மாற்றப்பட்டாலும் குழந்தை என்று பிறந்ததோ அன்று தான் பிறந்த நாள் கொண்டாடப்படும், தவிர பெயர் மாற்றம் செய்த நாளில் கொண்டாடுவது இல்லை என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே திமுக ஆட்சி மற்றும் அதிமுக ஆட்சி மாறி மாறி வரும்போது தமிழ் புத்தாண்டு தினம் சித்திரை 1 அல்லது தை 1 என்ற குழப்பம் மக்களுக்கு ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுவதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version