சினிமா செய்திகள்
விரைவில் வெளியாக உள்ள ‘ஜெ’ வெப் சீரிஸ்!
![Jayalalitha ramyakrishnan - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/03/Jayalalitha-ramyakrishnan.jpg)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்கை வரலாறு குறித்த வெப் சீரிஸ் படம் ஒன்றைக் கவுதம் மேனன் இயக்கி வருகிறார்.
ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸ்க்கு குயின் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வெப் சீரிஸ் ரிலீஸ் பணிகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் என்னை நோக்கி பாயும் தோட்டா மற்றும் துருவநட்சத்திரம் என இரண்டு படங்கள் நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் உள்ளன.
இந்த நிலையில் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் படத்தின் முதல் பிரதியைப் பார்த்த தனுஷ் படம் அருமையாக வந்துள்ளது என்றும் தனது சம்பள பாக்கில் 1.80 கோடி ரூபாயை விட்டுத் தருகிறேன் என்று கூறியுள்ளார்.
இதை அடுத்து என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் கோடையில் வெளியாகும் என்றும், துவுநட்சத்திரம் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.