தமிழ்நாடு

சிலிண்டர் விலை ரூ.560க்கு மேல் விற்கக்கூடாது: அதிர்ச்சி தகவல் சொன்ன முன்னாள் அமைச்சர்

Published

on

சமையலுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை ரூ.560க்கு மேல் விற்பனை செய்யக்கூடாது என்றும் அது ஏன் விற்பனை செய்யக்கூடாது என்பதை நான் மேடை போட்டு விளக்க தயார் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

திமுக அரசின் ஓராண்டு விளக்க பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட டிஆர் பாலு பேசியபோது சிலிண்டரின் விலை காங்கிரஸ் ஆட்சியில் 400 ரூபாய் இருந்தது என்றும் தற்போது 1015 ரூபாயாக விற்பனை ஆகிறது என்றும் அவர் தெரிவித்தார் .

சிலிண்டரின் விலை இவ்வளவு அதிக விலைக்கு விற்பதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் ஒரு சிலிண்டர் அதிகபட்சமாக ஆயுள் ரூ.560க்கு மேல் விற்கக்கூடாது என்றும் இதை நான் மோடி அல்லது அமித்ஷா யாராக இருந்தாலும் மேடை போட்டு என்னிடம் விவாதம் செய்ய தயார் என்றால் ரூ.560க்கு மேல் ஏன் விற்கக் கூடாது என்பதை நான் விளக்கம் அளிக்க தயார் என்றும் ஒருவேளை என்னுடைய கருத்து தவறாக இருந்தால் என்னை சாட்டையால் அடிக்கலாம் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

ஒரு சிலிண்டரின் விலை ரூ.560க்கு ரூபாய்க்கு மேல் விற்கக் கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலு கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version