கிரிக்கெட்

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கடத்தல்; சிக்கிய மர்மக் கும்பல்!

Published

on

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் மெக்கில், கடந்த மாதம் கடத்தப்பட்டு உள்ளார். இதைத் தொடர்ந்து அவரைக் கடத்தியவர்களைத் தேடும் பணியில் ஆஸ்திரேலிய காவல் துறையினர் ஈடுபட்டு வந்தனர். சிட்னியின் ஆஸ்திரேலிய போலீஸார், திடீர் சோதனை செய்ததில் ஸ்டுவர்டை கடத்திய கும்பலைச் சேர்ந்த 4 பேரை மடக்கிப் பிடித்தனர்.

50 வயதாகும் ஸ்டுவர்டை, கடந்த மாதம் 14 ஆம் தேதி மர்மக் கும்பலால் கடத்தப்பட்டார். அவரை சில மணி நேரம் துன்புறுத்திய அந்தக் கும்பல் ஸ்டுவர்டை விடுவித்தது. இந்த சம்பவத்தால் மிரண்டு போன ஸ்டுவர்ட், அப்போதிலிருந்து இப்போது வரை பெரிதாக வெளியில் தலை காட்டாமல் இருந்து வருகிறார்.

இந்த சம்பவத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட ஸ்டுவர்ட்க்கு நியாயம் கிடைக்க ஆஸ்திரேலிய போலீஸ் முயன்று வந்துள்ளது. அந்த வகையில் சிட்னியில் செய்த திடீர் ரெய்டில் வழக்கில் சம்பந்தமுடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த கடத்தல் சம்பவத்தையொட்டி, எந்த வித தொகையும் கடத்தல் கும்பலுக்கு கொடுக்கப்பவில்லை. ஆனால், பணத்தைக் குறி வைத்து தான் கடத்தல் சம்பவம் நடந்ததாக தெரிகிறது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version