உலகம்

ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர் இப்போது பீட்சா டெலிவரிபாய்: வைரல் புகைப்படம்!

Published

on

ஆப்கானிஸ்தான் நாட்டின் அமைச்சராக இருந்தவர் தற்போது பீட்சா டெலிவரி பாயாக மாறியது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் அஸ்ரப் கானி தலைமையிலான அமைச்சரவையில் தகவல் தொடர்பு துறை அமைச்சராக இருந்தவர் அகமது ஷா சதாத். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தான் நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தார் என்பதும் அதன் பின் இவர் பதவி விலகிவிட்டு ஜெர்மனி சென்றார் என்றும் தெரிகிறது.

இந்த நிலையில் ஜெர்மனியில் அவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பீட்சா டெலிவரி செய்யும் பணி புரிந்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெர்மனியின் மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் தனது டுவிட்டரில் அவருடைய புகைப்படத்தை பதிவு செய்து அகமது ஷா சதாத் பீட்சா டெலிவரிபாயாக பணிபுரிந்ததை உறுதி செய்துள்ளார்.

இரண்டு வருடத்திற்கு முன் ஆப்கானிஸ்தானின் தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த வரை நேற்று சந்தித்தேன். அவரிடம் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று நான் கேட்டபோது பீட்சா டெலிவரி பாயாக பணிபுரிகிறேன் என்று கூறினார். அதைக் கேட்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் தான் பீட்சா டெலிவரி பாயாக பணி செய்வதை அகமது ஷா சதாத் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது ’இவ்வளவு விரைவாக அஷ்ரப் கானி ஆட்சி முடிவுக்கு வரும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினியர் படித்து உள்ள அகமது ஷா சதாத் தன்னுடைய படிப்புக்கேற்ற வேலை கிடைத்தால் சந்தோசமாக செய்வேன் என்றும் கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version