தமிழ்நாடு

இங்கிலாந்து சுற்றுப்பயணம்: இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை!

Published

on

இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்ய இருக்கும் நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை மறந்துவிட வேண்டியதுதான் என இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ளதை அடுத்து அந்த போட்டியில் விளையாட இந்திய அணி ஜூன் இரண்டாம் தேதி மும்பையில் இருந்து கிளம்ப உள்ளது. இந்த நிலையில் மும்பையில் இருந்து இங்கிலாந்து செல்வதற்கு முன்னர் அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அந்த பரிசோதனையில் யாருக்காவது கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் இங்கிலாந்து தொடரை மறந்துவிட வேண்டியதுதான் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேலும் பாதுகாப்பை கணக்கில் கொண்டு பயோ பபிளில் வீரர்கள் இருப்பதை உறுதி செய்யவே இந்த நடைமுறையை பின்பற்ற உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இங்கிலாந்து பயணம் செய்வதற்கு முன்னதாக எட்டு நாட்கள் முன் மும்பையில் இங்கிலாந்து தொடரில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அனைவருக்கும் பயோபபிளில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் அதில் பாதிப்பு இருக்கும் வீரர்கள் கண்டிப்பாக இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்ல மாட்டார்கள் என்றும் திட்டவட்டமாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. எனவே வீரர்கள் அனைவரும் பாதுகாப்புடன் தங்களை நோய் தொற்றாமல் காத்துக் கொள்ள வேண்டும் என்றும் பிசிசிஐ அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version