இந்தியா

வெளிநாட்டு விமான சேவைக்கான தடை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!

Published

on

வெளிநாட்டு விமான சேவைக்கான தடை மேலும் ஒரு மாதம் நீடிப்பதாக மத்திய அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த மே மாதம் முதல் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தது என்பதும் தற்போது தான் ஓரளவு குறைந்து கொண்டே வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இரண்டாவது அலை தொடங்கியபோதே வெளிநாட்டு விமான போக்குவரத்தை மத்திய அரசு நிறுத்தியது. கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த பின்னர் தான் விமானப் போக்குவரத்து சேவை வெளிநாட்டுக்கு தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஏற்கனவே ஜூன் 30 வரை வெளிநாட்டு விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஜூலை 31 வரை மேலும் ஒரு மாதத்திற்கு வெளிநாட்டு விமான சேவைக்கு தடையை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து ஜூலை 31 வரை வெளிநாட்டு விமானங்கள் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் சிறப்பு விமானங்கள் மட்டும் ஒரு சில நாடுகளுக்கு இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கும் விமான சேவை ஜூலை 31 பிறகு நிலைமையை அனுசரித்து இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version