வணிகம்

ஃபோர்டு நிறுவனத்தில் மறுசீரமைப்பு; 7000 ஊழியர்கள் பணிநீக்கம்!

Published

on

அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 7000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

ஃபோர்டு நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே விற்பனை சரிந்து செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதைக் குறைப்பதற்காக ஃபோர்டு இந்த முடிவை எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் பணிநீக்கம் செய்வதால் ஃபோர்டு நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 600 மில்லியன் டாலர் செலவு குறையும் என அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஜிம் ஹாக்கெட் கூறியுள்ளார்.

ஃபோர்டு

ஃபோர்டு நிறுவனத்தில் அமெரிக்காவில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பணிபுரிகின்றனர். தற்போது அங்கிருந்து 2,500 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

இந்தியாவில் ஃபோர்டு நிறுவனத்தில் 10,000 ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் எவ்வளவு நபர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளார்கள் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Trending

Exit mobile version