வணிகம்

ஃபோர்ப்ஸ் 2022 இந்திய 100 பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு.. டாப் 10 இடத்தை பிடித்தவர்கள் விவரங்கள்!

Published

on

ஃபோர்ப்ஸ் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அதில் அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி 150 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்தியாவின் மிக பெரிய பணக்காராராக உள்ளார். இவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி உள்ளார். இவரது செல்வ மதிப்பு சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 5 சதவிகிதம் சரிந்து 88 பில்லியன் டாலராக உள்ளது.

மூன்றாம் இடத்தில் 27.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அவென்யூ சூப்பார் மார்க்கெட் டீமார்ட் தலைவர் ராதாகிஷன் தமானி உள்ளார்.

இந்தியாவில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்த சைரஸ் பூனாவாலா 21.5 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் 4வது இடத்தில் உள்ளார்.

ஹெச்சிஎல் நிறுவன தலைவர் சிவ் நாடார் 21.4 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் 5வது இடத்தில் உள்ளார்.

ஜிண்டால் குழுமத் தலைவர் சாவித்ரி ஜிண்டால் 16.4 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் 6வது இடத்தில் உள்ளார். சன் பார்மா நிறுவன தலைவர் திலீப் சாங்வி 15.5 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் 7வது இடத்தில் உள்ளார். இந்துஜா சகோதரர்கள் 15.2 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் 8வது இடத்தில் உள்ளார்கள்.

பிர்லா குழுமத் தலைவர் குமார் பிர்லா 15 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் 9வது இடத்தில் உள்ளார். பஜாஜ் குழும 14.6 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் 10வது இடத்தில் உள்ளது.

Trending

Exit mobile version