வணிகம்

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2-ம் இடத்திற்கு முன்னேறிய அதானி!

Published

on

2019-ம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

வழக்கம் போல இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவரான முகேஷ் அம்பானி இடம் பிடித்துள்ளார். கடந்த 12 வருடங்களாகத் தொடர்ந்து முதல் இடத்தை முகேஷ் அம்பானி உள்ளார்.

இரண்டாம் இடம் பிடித்துள்ள கவுதம் அதானி சென்ற ஆண்டு 10வது இடத்திலிருந்த நிலையில் இந்த முறை 8 இடங்கள் முன்னேறி 2வது இடத்தை பிடித்துள்ளார்.

கோடாக் மஹிந்தரா வங்கி நிர்வாக இயக்குநரான உதய் கோடாக் டாப் 5 இந்திய கோடீஸ்வர்கள் பட்டியலில் முதல் முறையாக இடம்பெற்றுள்ளார்.

இந்தியாவின் டாப் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஈ-லர்னிங் நிறுவனமான பைஜூஸ் தலைவரான பைஜூ ரவீந்தரான் (72வது) முதல் முறையாக இடம் பிடித்துள்ளார். இவரை தொடர்ந்து அரிஸ்டோ பார்மா நிறுவனர் மஹிந்தரா பிரசாத், ஹல்திராம்ஸ் ஸ்னேக்ஸ் நிறுவர்களக மனோஹர் லால், மதுசூதன் அகர்வால் மற்றும் பலரும் முதல் முறையாக டாப் 100 இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்கள்.

தமிழகத்தை சேர்ந்த சன் குழுமத்தின் தலைவரான கலாநிதி மாறன் 49வது இடத்தில் உள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version