தமிழ்நாடு

M.Ed படிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? இதோ முழு விபரம்!

Published

on

தமிழ்நாட்டில் முதுகலை கல்வியியல் படிப்பான M.Ed படிப்பதற்கு உண்டான அறிவிப்புகள் சற்றுமுன் வெளியாகியுள்ளதை அடுத்து மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதில் விண்ணப்பிக்க தயாராகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து இயல்பு நிலை திரும்பி வருகிறது என்பதும் குறிப்பாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்து விட்டால் பள்ளி கல்லூரிகள் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு சேர நாளை முதல் விண்ணப்பம் செய்யலாம் என்று கல்லூரி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

M.Ed படிக்க விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பங்களை www.tngasaedu.in மற்றும் www.tngasaedu.edu ஆகிய இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து M.Ed படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி நாளைமுதல் மேற்கண்ட இணையதளங்களில் விண்ணப்பம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Trending

Exit mobile version