தமிழ்நாடு

இந்த ஆண்டு தீபாவளிக்கு எவ்வளவு நேரம் பட்டாசு வெடிக்கலாம்? தெரியுமா?

Published

on

2018-ம் ஆண்டு தீபாவளிக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை ஏற்ற தமிழக அரசு காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

இது சென்ற முறையே மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருந்தாலும், நகரங்கள் தவிரப் பிற இடங்களில் மக்கள் எப்போதும் போலவே பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடினர்.

எனவே இந்த ஆண்டு தீபாவளிக்கு எவ்வளவு நேரம் பட்டாசு வெடிக்கலாம் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தைத் தொடர்புகொண்ட போது, சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் 2 மணி நேரம் மட்டுமே தமிழகத்தில் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இதற்கு சென்ற ஆண்டை விட அதிகளவில் மக்கள் வரவேற்பை அளிப்பார்கள் என்று எதிபார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளார்கள்.

seithichurul

Trending

Exit mobile version