தமிழ்நாடு

அனைத்து சாதியினர்களும் அர்ச்சகர் ஆகலாம்: பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர்!

Published

on

கோயில்களில் அனைத்து சாதியினர்களும் அர்ச்சகராக வேண்டும் என திமுக பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறது. அண்ணா, கருணாநிதி காலத்திலிருந்து கோரிக்கை விடப்பட்டு இருந்த நிலையில் தற்போது அந்த கோரிக்கையை நனவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்து அவர்களுக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.

தமிழக வரலாற்றில் முதல் முறையாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் நியமன ஆணையை இன்று நடைபெற்ற விழா ஒன்றில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வழங்கியுள்ளார்.

அர்ச்சகர் பயிற்சி முடித்த 58 பேர்கள், 29 ஓதுவார்கள் உள்பட 158 கோவில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1970ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியால் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் 50 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைமுறைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் பணி நியமனம் பெற்ற நபர்கள் அனைவரும் தமிழக முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version