சினிமா செய்திகள்

பிகிலுக்கு முன்னாடியே ஃபுட்பால் ஆடும் கதிர்! ஜடா டீசர் ரிலீஸ்!

Published

on

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. பிகில் படத்தில் நடிகர் கதிர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், பிகில் படத்திற்கு முன்பாகவே அவர் நடிப்பில் வெளியாகவுள்ள ஜடா படத்தின் டீசர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

பரியேறும் பெருமாள் வெற்றிக்கு பிறகு கதிர் நடிப்பில் இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான சத்ரு படம் சரியாக ஓட வில்லை. அதனை தொடர்ந்து அறிமுக இயக்குநர் குமரன் இயக்கத்தில் கால்பந்தாட்ட கதையை மையமாக வைத்து கதிர் நடித்துள்ள ஜடா படம் உருவாகியுள்ளது. அதன் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் கதிருடன் யோகிபாபு இணைந்து நடித்துள்ளார். இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

வடசென்னை, மெட்ராஸ் படங்களை போல இந்த படமும் வடசென்னையை மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படமும் வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version