வணிகம்

தமிழ்நாட்டில் தொழிற்சாலையைத் தொடங்கும் பிரபல ஷூ நிறுவனம்.. எத்தனை கோடி தெரியுமா?

Published

on

பிரபல காலணிகள் பிராண்டுகளான நைக், அடிடாஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஷூக்கள் தயாரித்து வழங்கி வரும் தைவானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பவு சென் தமிழ்நாட்டில் தொழிற்சாலையைத் தொடங்க உள்ளது.

விளையாட்டுக் காலணிகள், சாதாரண காலணிகளைத் தமிழ்நாட்டில் தொடங்கப்பட உள்ள தொழிற்சாலையில் செய்யப்பட உள்ளது.

இந்த தொழிற்சாலையைத் தொடங்கப்படுவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை எடுத்துள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டில் 500 கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும்.

திருச்சி, விழுப்புரம் அல்லது தூத்துக்குடியில் இந்த தொழிற்சாலை தொடங்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. பவு சென் நிறுவனத்திற்குத் தைவான், சீனா, இந்தோநேஷியா, வியட்நாம், அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் கிளைகள் உள்ளன.

சென்ற அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசு சார்பாகத் தைவான் சென்ற குழு, முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஃபாக்ஸ்கான், பெகாட்ரான், தைவான் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் உற்பத்தியாளர்கள் சங்கம் (டீமா), மற்றும் தைவான் காலணி உற்பத்தியாளர்கள் சங்கம் (டிஎஃப்எம்ஏ) ஆகியோர் பிரதிநிதிகள் குழுவை சந்தித்தது. அதன் அடுத்த கட்டமாக இந்த முதலீடு தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு அரசு, காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்புக் கொள்கை 2022-ஐ அறிமுகம் செய்தது. இதன் மூலம் காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்பில் 20,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பது மாநிலத்தின் இலக்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை ஆசியாவிலேயே காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்திக்கான சிறந்த இடமாக மாற்ற இந்த கொள்கை உதவும் என கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் எற்கனவே ஃபெங் டே மற்றும் ஹாங் ஃபூ என இரண்டு நிறுவனங்கள் காலணிகள் தயாரித்து வருகின்றன. இந்த நிறுவனங்களும் மேலும் கூடுதலாகத் தமிழ்நாட்டில் முதலீடு செய்து தொழிற்சாலையை விரிவு படுத்த உள்ளன. இதனால் கிட்டத்தட்ட தமிழ்நாட்டிற்கு 1000 கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும் எனவும், 20 ஆயிரம் மேற்பட்டவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version