Connect with us

வணிகம்

தமிழ்நாட்டில் தொழிற்சாலையைத் தொடங்கும் பிரபல ஷூ நிறுவனம்.. எத்தனை கோடி தெரியுமா?

Published

on

பிரபல காலணிகள் பிராண்டுகளான நைக், அடிடாஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஷூக்கள் தயாரித்து வழங்கி வரும் தைவானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பவு சென் தமிழ்நாட்டில் தொழிற்சாலையைத் தொடங்க உள்ளது.

விளையாட்டுக் காலணிகள், சாதாரண காலணிகளைத் தமிழ்நாட்டில் தொடங்கப்பட உள்ள தொழிற்சாலையில் செய்யப்பட உள்ளது.

இந்த தொழிற்சாலையைத் தொடங்கப்படுவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை எடுத்துள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டில் 500 கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும்.

திருச்சி, விழுப்புரம் அல்லது தூத்துக்குடியில் இந்த தொழிற்சாலை தொடங்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. பவு சென் நிறுவனத்திற்குத் தைவான், சீனா, இந்தோநேஷியா, வியட்நாம், அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் கிளைகள் உள்ளன.

சென்ற அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசு சார்பாகத் தைவான் சென்ற குழு, முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஃபாக்ஸ்கான், பெகாட்ரான், தைவான் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் உற்பத்தியாளர்கள் சங்கம் (டீமா), மற்றும் தைவான் காலணி உற்பத்தியாளர்கள் சங்கம் (டிஎஃப்எம்ஏ) ஆகியோர் பிரதிநிதிகள் குழுவை சந்தித்தது. அதன் அடுத்த கட்டமாக இந்த முதலீடு தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு அரசு, காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்புக் கொள்கை 2022-ஐ அறிமுகம் செய்தது. இதன் மூலம் காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்பில் 20,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பது மாநிலத்தின் இலக்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை ஆசியாவிலேயே காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்திக்கான சிறந்த இடமாக மாற்ற இந்த கொள்கை உதவும் என கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் எற்கனவே ஃபெங் டே மற்றும் ஹாங் ஃபூ என இரண்டு நிறுவனங்கள் காலணிகள் தயாரித்து வருகின்றன. இந்த நிறுவனங்களும் மேலும் கூடுதலாகத் தமிழ்நாட்டில் முதலீடு செய்து தொழிற்சாலையை விரிவு படுத்த உள்ளன. இதனால் கிட்டத்தட்ட தமிழ்நாட்டிற்கு 1000 கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும் எனவும், 20 ஆயிரம் மேற்பட்டவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
seithichurul
ஆரோக்கியம்10 நிமிடங்கள் ago

மீன் சாப்பிட்ட பிறகு கையில் மீன் வாசனையை போக்க எளிய டிப்ஸ்!

ஜோதிடம்18 நிமிடங்கள் ago

சிம்ம ராசிக்கான செப்டம்பர் மாத பலன்கள்: நிதி, காதல், ஆரோக்கியத்தில் அதிர்ஷ்டம் வருமா?

ஆன்மீகம்29 நிமிடங்கள் ago

தெரு மூலையில் வீடு அமைப்பது சுபமா, அசுபமா? வாஸ்து சொல்வது என்ன?

ஆன்மீகம்35 நிமிடங்கள் ago

பண வரவை பெருக்கும் ராசிகள்: சுக்கிர பகவான் யாருக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பார்?

மாத பலன்1 மணி நேரம் ago

செப்டம்பர் 2024 மாத ராசி பலன்கள்: 12 ராசிகளுக்கான அதிர்ஷ்டமும் சவால்களும்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

மகரம் இன்றைய ராசிபலன்: சொத்து பிரச்னைகள், மருத்துவ செலவுகள்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 மணி நேரங்கள் ago

செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 8 வரை – உங்கள் ராசிக்கு ஏற்ற ராசிபலன்!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

செப்டம்பரில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – விநாயகர் சதுர்த்திக்கு வங்கிகள் மூடப்படுமா? கண்டறியுங்கள்!

சினிமா2 மணி நேரங்கள் ago

GOAT பட்ஜெட் ரூ.400 கோடி, விஜய்க்கு சம்பளம் ரூ.200 கோடி – தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கம்!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

சென்னையில் வணிக சிலிண்டர் விலை 38 ரூபாய் உயர்வு!

வணிகம்5 நாட்கள் ago

YouTube Premium கட்டணம் உயர்வு: வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தமிழ்நாட்டில் தங்கம் விலையில் மாற்றமில்லை!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(28-08-2024)

தமிழ்நாடு7 நாட்கள் ago

கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் அட்டவணையில் மாற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (29/08/2024)!

தமிழ்நாடு7 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு: மாணவர்களுக்கு நிம்மதி

தமிழ்நாடு7 நாட்கள் ago

அதிமுக-விஜய் கூட்டணி தேர்தல் நேரத்தில் முடிவு: எடப்பாடி கே. பழனிசாமி

பல்சுவை7 நாட்கள் ago

கிருஷ்ண ஜெயந்திக்கு சிறப்பு நைவேத்தியங்கள்

சினிமா செய்திகள்5 நாட்கள் ago

பிரபல நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

கிருஷ்ண ஜெயந்தியை எப்படி கொண்டாடுவது?