தமிழ்நாடு

சிலிண்டர் விலை உயர்வை அடுத்து சமையல் எண்ணெய் விலையும் கடும் உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி

Published

on

உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இருந்து தான் இந்தியாவுக்கு 90 சதவீத சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் சமையல் எண்ணெய் விலை கடும் உயர்வு பெற்று இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்று முதல் வர்த்தக உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்து உள்ளது என்பதும் 5 மாநில தேர்தலுக்குப் பின் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயரும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சமையல் எண்ணெய் விலையும் உச்சத்திற்கு சென்று உள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் காரணமாக சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாக கூறப்பட்டாலும் தமிழகத்தில் உற்பத்தி செய்யக்கூடிய கடலை எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய சமையல் எண்ணெய் விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.

15 கிலோ எடை கொண்ட சூரியகாந்தி எண்ணெய் டின் உக்ரைன் போருக்கு முன்பு 2,150 எனவும் தற்பொழுதுரூ 2,525 எனவும் விற்பனையாகிறது. அதேபோல் சில்லரை விற்பனையில் ஒரு லிட்டர் ரீபைண்ட் ஆயில் ரூ.130 க்கு விற்பனை ஆன நிலையில் தற்பொழுது ரூ.160 க்கு விற்பனையாகிறது.

5 கிலோ எடை கொண்ட பாமாயில் டின் ரூ 1,900க்கு விற்பனையான நிலையில் தற்பொழுது ரூ.2,350 க்கு விற்பனையாகிறது. மேலும் தமிழகத்தில் உற்பத்தி செய்யக்கூடிய கடலை எண்ணையும் ரூ 2,400 விற்பனையான நிலையில் தற்போது ரூ.2,600 க்கு விற்பனையாகிறது.

சமையல் எண்ணெய் விலையை மத்திய , மாநில அரசுகள் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version