வணிகம்

ஜனவரி 3 முதல் இந்தியாவில் புதிய விமான நிறுவனம் ‘ஃப்ளைபிக்’.. எந்த வழித்தடங்களில்!

Published

on

இந்தியாவில் ஜனவரி 3-ம் தேதி ஃப்ளைபிக் என்ற புதிய பயணிகள் விமான நிறுவனம் சேவையை தொடங்க உள்ளது.

ஃப்ளைபிக் நிறுவனம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் தங்களது பயணிகள் விமான சேவையை வழங்க உள்ளது.

முதற்கட்டமாக இந்தூர் – அகமதாபாத் வழித்தடத்தில் பிற்பகல் 2:30 மணியளவில் விமான சேவை தொடங்கப்படுகிறது. பயண நேரம் 1 மணி நேரம் 5 நிமிடங்கள் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் ஜனவரி 13-ம் தேதிம் முதல் இந்தூர்-ராய்ப்பூர் வழித்தடத்திலும், அகமதாபாத் – போபால் வழித்தடத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதலும் ப்ளைபிக் நிறுவனம் விமான சேவையைத் தொடங்க உள்ளது.

விமான சேவைக்கான புக்கிங்கை தொடங்கிய ப்ளைபிக் நிறுவனம், இதுவரை 25 சதவீத டிக்கெட்கள் புக் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. 15 ஆயிரம் ஏஜெண்ட்களுக்கு விமான டிக்கெட் புக் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று ப்ளைபிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ப்ளைபிக் நிறுவனத்துக்கு டிசம்பர் 14-ம் தேதி விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version