வைரல் செய்திகள்
எங்க வேணாலும் போகலாம்… வெறும் ரூ. 915- இண்டிகோ விமான நிறுவனம் சூப்பர் ஆஃபர்!
இண்டிகோ விமான நிறுவனம் 915 ரூபாய்க்கு எங்கு வேண்டுமானாலும் பயணிக்கும் வகையில் புதிய ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது.
இண்டிகோ விமான நிறுவனத்தின் 15-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தில் பயணம் செய்ய ஆகஸ்ட் 4-ம் தேதி மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரைக்குள் பயணம் செய்ய விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இந்த காலகட்டத்துக்குள் முன்பதிவு செய்தால் செப்டம்பர் 1, 2021 முதல் மார்ச் 26, 2022 வரையில் 915 ரூபாய்க்கு விமானப் பயணம் மேற்கொள்ளலாம். இந்தச் சலுகை இருக்கும் வரையில் மட்டுமே இந்த ஆஃபர் செல்லுபடியாகும். எந்தெந்த இடங்களுக்கு எல்லாம் பயணிக்கலாம் என்ற விவரம் பொதுவெளியில் வெளியாகவில்லை. முன்பதிவு செய்யும் போது தகவல்கள் வரலாம்.
கூடுதலாக 3 ஆயிரம் ரூபாய் பயணச்சீட்டு எடுக்க ஹெச்.டி.எஃப்.சி கார்டு பயன்படுத்தினால் 5 சதவிகிதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 915 ரூபாய் என்பது விமானக் கட்டணம் மட்டுமே. இதுபோக, அரசு வரிகள், விமான நிலையக் கட்டணம் ஆகியவற்றில் எந்தத் தள்ளுபடியும் கிடையாது.
Time for SALE-brations! Grab the best fares, pack your bags and make that much awaited trip happen. Book now https://t.co/i2TT16rSey #15YearsOfBeing6E #LetsIndiGo #Aviation pic.twitter.com/Enb8a6UpFV
— IndiGo (@IndiGo6E) August 4, 2021