தமிழ்நாடு

வைகை அணையில் முதல்கட்ட வெள்ள எச்சரிக்கை!

Published

on

வைகை அணையில் முதல் கட்ட வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தேனி மாவட்டத்திலுள்ள வைகை அணை 70 அடி உயரம் கொண்டது என்பதும், இதில் தற்போது 66 அடி கொள்ளளவில் நீட் எட்டியதை அடுத்து முதல் கட்ட வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கரையோர மக்களுக்கு இந்த வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் வைகை அணைக்கு 1594 அடி நீர்வரத்து உள்ள நிலையில் நீர் இருப்பு 4739 கனஅடியாக உள்ளது என்றும் அறிவிக்கப்ப்ட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் வைகை அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து வருகிறது என்பதும் அதனால் வைகை அணை கிட்டத்தட்ட முழு கொள்ளளவை எட்டி விட்டது குறிப்பிடத்தக்கது

வைகை அணை முழு கொள்ளளவை எட்டி விட்டதால் தேனி மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version