தமிழ்நாடு

தென்பெண்ணை ஆற்றில் கரைபுரண்டோடும் தண்ணீர்: 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

Published

on

கடந்த சில நாட்களாக கிருஷ்ணகிரி பகுதியில் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் 5 மாவட்டங்களில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது என்பதும் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமின்றி கேஆர்பி அணையில் நீர்வரத்து அதிகரித்து வருவதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாகவும் அந்த பகுதியில் உள்ள மக்கள் தாழ்வான பகுதிகள் இருந்தால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாறி கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version