தமிழ்நாடு

பொங்கிவரும் தண்ணீர்.. தமிழக காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை

Published

on

பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு அதிக அளவு தண்ணீர் வருவதால் தமிழகத்தில் காவேரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் நீர் வரத்து அதிகம் ஆகியுள்ளது.

இதனால் தமிழகத்திற்கு நீர்திறப்பு மீண்டும் அதிகமாகி உள்ளது. இரண்டாவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

காவிரியில் வெள்ளம்

கபினியிலுருந்து 80,000 கனஅடி வீதம் உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. அதேபோல் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 62,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1.42 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் பெரிய அளவில் காவிரி ஆறு ஓரம் உள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version