இந்தியா

அதானி குழுமத்துடன் இணைந்தது ஃபிளிப்கார்ட்: ஏன் தெரியுமா?

Published

on

உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்ட் இந்தியாவில் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது என்பதும் இந்த நிறுவனம் மிகப்பெரிய அளவில் இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருவதோடு நல்ல லாபத்தையும் பார்த்து வருகிறது என்பதும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மளிகை சாமான்கள் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் வரை இந்த நிறுவனத்தின் மூலம் மக்கள் எளிதில் வாங்கி பயன் அடைவார்கள் என்பதும் வீட்டிற்கே கொண்டுவந்து டெலிவரி செய்து சிறந்த சேவையை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென அதானி குழுமத்துடன் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது அதானி குழுமத்துடன் பிளிப்கார்ட் இணைந்து பணியாற்ற உள்ளதாக பிளிப்கார்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்துள்ளது. இதற்கு காரணமாக அந்நிறுவனம் கூறுகையில் ’இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எளிதில் பொருட்களை கொண்டு செல்வதற்காகவே அதானி குழுமத்துடன் இணைவதாக விளக்கமளித்துள்ளது.

ஏற்கனவே இந்தியாவின் பல முக்கிய வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் அதானி குழுமம் தற்போது பிளிப்கார்ட் உடன் இணைந்து உள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version