வணிகம்
வால்மார்ட்டின் இந்திய வணிகத்தை கைப்பற்றும் ஃபிளிப்கார்ட்!
அமெரிக்க கேஷ் & கேரி வணிக நிறுவனமான வால்மார்ட்டின் இந்திய வணிகத்தை ஃபிளிப்கார்ட் கைப்பற்றியுள்ளது.
ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் அதன் தாய் நிறுவனமான வால்மார்ட்டுக்கு 77 சதவீத பங்குகள் உள்ள நிலையில், இந்த பரிவர்த்தனை தற்போது நிறைவேறியுள்ளது.
இந்த பரிவர்த்தனை மூலமாக ஃபிளிகார்ட்டின் மளிகை பொருட்கள் விற்பனையில் அதிக வளர்ச்சி இருக்கும்.
வால்மார்ட் நிறுவனத்திற்கு இந்தியாவில் 28 மொத்த விலை கடைகள் உள்ளன. இந்த கடைகளினால் வால்மார்ட் நிறுவனம் 2018-2019ம் ஆண்டு 171.68 கோடி ரூபாய் நட்டம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.