வணிகம்

மாதம் ரூ.75,000 வரை வருமானம் வழங்கும் ஃபிளிப்காட்டின் இந்த ஃபிராஞ்சிஸ் பற்றி தெரியுமா?

Published

on

உங்கள் மாத வருமானத்தை அதிகரிக்க ஏதேனும் சிறிய அளவில் பிஸ்னஸ் தொடங்க வேண்டும் எனத் திட்டமிட்டு வருகிறீர்களா? இந்தியாவின் மிகப் பெரிய ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட்டின் டெலிவரி பார்ட்னர் ஃபிராஞ்சிஸ் பற்றி தெரியுமா உங்களுக்கு?

#image_title

ஃபிளிப்கார்ட் டெலிவரி பார்ட்னர் ஃபிராஞ்சிஸ்

ஃபிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்யும் பொருட்களை டெலிவரி செய்வதற்கான சேவையை ஃபிராஞ்சிஸ் மூலமாக ஃபிளிப்கார்ட் வழங்கி வருகிறது.

ஃபிளிப்காட் டெலிவரி பார்ட்னராக தேவையான ஆவணங்கள் என்னென்ன?

ஃபிளிப்கார்ட்டின் டெலிவரி பார்ட்னர்கள் ஆவதற்கு சில நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். சொந்தமாகப் பொருட்களை டெலிவரி செய்வதற்கான 4 சக்கர வாகனம் இருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும். வழங்கப்படும் டெலிவரி தேதிகளில் அதனை முடிக்க முடியும் என்பதற்கு உறுதி அளிக்க வேண்டும். 500 முதல் 1500 சதுர அடி இடம் இருக்க வேண்டும்.

ஃபிளிப்காட் டெலிவரி பார்ட்னராக எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

நிங்கள் வசிக்கும் பகுதிகளைப் பொருத்து ஃபிளிப்காட் டெலிவரி பார்ட்னர் பிராஞ்சிஸ் கட்டணம் வேறுபடும். குறைந்தது 1 லட்சம் ரூபாய் முத 5 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டி வரும்.

ஃபிளிப்காட் டெலிவரி பார்ட்னர் பிராஞ்சிஸ் மூலமாக எவ்வளவு லாபம் கிடைக்கும்?

நீங்கள் டெலிவரி சேவை வழங்கும் இடம் மற்றும் எவ்வளவு டெலிவரி செய்கிறீர்கள் என்பதைப் பொருத்து லாபம் மாறும். ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையில் லாபம் கிடைக்கும்.

ஃபிளிப்காட் டெலிவரி பார்ட்னர் பிராஞ்சிஸ் ஆவதற்கான தகுதிகள் என்னென்ன?

ஃபிளிப்காட் டெலிவரி பார்ட்னர் பிராஞ்சிஸ் ஆவதற்கு 18 வயதை நீங்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும். சொந்தமாக 4 சக்கர வாகனம் மற்றும் ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும். கூடுதலாக, நீங்கள் டெலிவரி தேதிகளுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

ஃபிளிப்காட் டெலிவரி பார்ட்னர் பிராஞ்சிஸ்க்கு விண்ணப்பிப்பது எப்படி?

ஃபிளிப்காட் டெலிவரி பார்ட்னர் பிராஞ்சிஸ்க்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த இணைப்பை கிளிக் செய்வதன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

seithichurul

Trending

Exit mobile version