உலகம்

விமான பயணிக்கு கொடுக்கப்பட்ட உணவில் இருந்த பல்.. அதிர்ச்சி சம்பவம்

Published

on

விமான பயணி ஒருவருக்கு விமான நிலைய ஊழியர்கள் கொடுத்த உணவில் பல் ஒன்று இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு உணவு கொடுக்கப்பட்டது. அவர் அந்த உணவை எடுத்து ஆசையாக சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென அந்த உணவில் பல் ஒன்று இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதனை உடனே அவர் தனது மொபைல் போன் மூலம் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். அவர் பதிவு செய்த புகைப்படத்தில் அரிசி உணவுடன் பல் ஒன்று இருந்தது நன்றாக தெரிந்தது. இதனை அடுத்து அந்த பயணி விமான நிறுவனத்திடம் புகார் அளித்தார்.

உங்கள் விமான நிறுவனம் கொடுத்த உணவில் இந்த பல் இருந்தது என்றும் எங்களுக்கு எல்லா பற்களும் இருந்ததால் இது எங்களுடைய பல் இல்லை என்றும் உங்களுடைய கால் சென்டரில் உள்ள யாரையும் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் பதிவு செய்திருந்தார்.

இதனை அடுத்து அந்த விமான நிறுவனம் அவருக்கு பதில் அளித்தது. உங்களுக்கு நேர்ந்த சங்கடத்திற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். தயவு செய்து எங்கள் சேவை அதிகாரிகளை தொடர்புகொண்டு விபரங்களை கொடுங்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

விமானத்தில் கொடுக்கும் உணவில் இது போன்ற விரும்பத்தகாத பொருட்கள் இருப்பது இது முதல் முறை அல்ல என்றும் ஏற்கனவே பலமுறை இதே போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது என்றும் இந்த ட்விட்டை படித்த பயனாளிகள் கமெண்ட்ஸ் பகுதியில் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version