இந்தியா

அயோத்தியில் பிரமாண்டமான மசூதி!

Published

on

குடியரசு தினத்தன்று அயோத்தியில் மசூதி கட்டும் பணி தொடங்கவிருப்பதாக இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீண்ட காலமாக இழுபறியாக இருந்த ராம ஜென்ம பூமி வழக்கிற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பாபர் மசூதி உள்ள இடத்தில் இராமர் கோவிலை விஸ்தீரணம் செய்யவும் அயோத்தியின் வேறு பகுதியில் தனியாக 5 ஏக்கர் நிலப்பரப்பில் புதிதாக மசூதி கட்டிக் கொள்ளலாம் எனவும் இந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது.

இதனையடுத்து கடந்த வருடம் பிரதமர் மோடி இராமர் கோவிலுக்கான பணிக்கு அடிக்கல் நாடினார். கோவில் கட்டுமான பணிக்கு ராம ஜென்ம பூமி ஷேத்ரா எனும் அறக்கட்டளை தொடங்கப்பட்டு நன்கொடை திரட்டபட்டு வருகிறது.

அதே சமயத்தில் அயோத்தியில் உள்ள தன்னிபூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் மசூதி கட்டுவதற்கான முன் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் மசூதியின் மாதிரி வரைபடம் இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை வெளியிட்டது. இந்தச் சூழலில் குடியரசு தினத்தன்று அடிக்கல் நாட்டும் பணி நடைபெற உள்ளது.

இது தொடர்பாக கடந்த வாரம் ஞாயிற்று கிழமையன்று இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளையின் கீழ் 9 உறுப்பினர்கள் கொண்ட குழு கலந்தாய்வு செய்தது. முதலில் மரக்கன்றுகள் நடப்பட்டு கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்படும் எனவும் அங்கு மசூதியைச் சுற்றி உள்ள பகுதிகளில் மருத்துவமனை, இஸ்லாமிய காலச்சார மையம், பொது நூலகம் போன்றவை கட்டப்படும் எனவும் உறுதி செய்யப்பட்டது. இந்திய வரித்துறையிலிருந்து முழு அனுமதி கிடைக்காத நிலையில் மசூதி கட்டும் பணி நடைபெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version