தமிழ்நாடு

5 சுரங்கப்பாதையில் போக்குவரத்துக்கு தடை: சென்னை காவல்துறை அறிவிப்பு!

Published

on

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது என்பதும் குறிப்பாக சுரங்க பாதைகளில் தண்ணீர் இருந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று காலை இரண்டு சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என சென்னை காவல்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது ஐந்து சுரங்க பாதைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகரில்‌ வாகன போக்குவரத்தின்‌ தற்போதைய நிலவரம்‌.

நீர்‌ தேங்கியுள்ள சாலைகள்‌ மற்றும்‌ மழைநீர்‌ பெருக்கு காரணாமாக, செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்‌

1. ரங்கராஜபுரம்‌ இரண்டு சக்கர வாகண சுரங்கப்பாதை – போக்குவரத்து ‘தடைசெய்யப்பட்டுள்ளது.

2. மேட்லி சுரங்கப்பாதை மழைநீர்‌ தேங்கி உள்ளதால்‌- போக்குவரத்து ‘தடைசெய்யப்பட்டுள்ளது.

3. “கே.கே.நகர்‌ ராஜமண்ணார்‌ சாலையில்‌ தண்ணீர்‌ தேங்கி உள்ளதால்‌ போக்குவரத்து. தடைசெய்யப்பட்டு, 2வது. அவென்யூவை நோக்கி ‘தருப்பிவிப்பட்டுள்ளது.

4. “வளசரவாக்கம்‌ மெகா மாட்‌ சாலையில்‌ தண்ணீர்‌ தேங்கி உள்ளதால்‌ போக்குவரத்து தடை செய்யப்பட்டு, ஆற்காடு ரோடு செல்ல ‘கேசவத்திணி சாலை நோக்கி! திருப்பி விடப்பட்டுள்ளது.

5. வாணி மஹால்‌ முதல்‌ பென்ஸ்‌ பார்க்‌ வரை தண்ணிர்‌ தேங்கி உள்ளதால்‌ போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, ஹபிபுல்லா சாலை மற்றும்‌ ராகவைய்யா சாலை வழியாக திரும்பி விடப்பட்டுள்ளது.

6. சென்னை மாநகர மழைநீர்‌ வடிகால்‌ வாரிய சீரமைப்பு பணியை அண்ணா பிரதான சாலையில்‌ மேற்கொண்டு வருகிறார்கள்‌. இதன்‌ காரணமாக கே.கே.நகர்‌ ஜி.எச்‌.க்கு எதிரே உள்ள அண்ணா பிரதான சாலையில்‌ வடிகால்‌ நீர்‌ அமைக்கும்‌ பணியை எளிதாக்கும்‌ வகையில்‌ உதயம்‌ திரையரங்கம்‌ நோக்கி செல்லும்‌ போக்குவரத்து எதிர்‌ திசையில்‌ அணுமதிக்கப்படுகிறது. இதேபோல்‌ உதயம்‌ சந்திப்பில்‌ காசி முனையிலிருந்து அண்ணனா பிரதான சாலை நோக்கி செல்லும்‌ கனரக வாகனங்கள்‌ மட்டும்‌ அசோக்‌ பில்லர்‌ நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

7. மேடவாக்கம்‌. முதல்‌ சோழிங்கநல்லூர்‌ வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டடுள்ளது. மாறாக காமாட்சி மருத்துவமனை வழியாக ‘சோழிங்நல்லூர்‌ நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

8. தாம்பரம்‌ இரண்டு சக்கரம்‌ மற்றும்‌ இலகுரக வாகன சுரங்கப்பாதை – போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

9. கணேஷபுரம்‌ சுரங்கப்பாதை போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version