இந்தியா

5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு: 7 கட்டங்களாக நடைபெறும் என தகவல்!

Published

on

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே வெளியான செய்தியை அடுத்து சற்றுமுன்னர் தலைமை தேர்தல் ஆணையர் 5 மாநில தேர்தல் தேதியை அறிவித்துள்ளார்
இதன்படி உத்தரபிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவுகள் நடைபெறும் என்றும் உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்
மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி மற்றும் மார்ச் 3ஆம் தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என தெரிவித்துள்ள தலைமை தேர்தல் ஆணையர், 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்
மேலும் ஜனவரி 15ஆம் தேதி வரை பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் ஊர்வலத்திற்கு தடை என்றும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை டிஜிட்டல் காணொளி வாயிலாக மேற்கொள்ள வேண்டும் என்றும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி என்றும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்
மேலும் தேர்தல் புகார்களை தெரிவிக்க பொதுமக்கள் தேர்தல் ஆணையத்தின் செயலியை பயன்படுத்தலாம் என்றும் மாற்றுத்திறனாளிகளை கருத்தில் கொண்டு அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தரைத்தளத்திலேயே அமைக்கப்படும் என்றும் தேர்தல் பணியில் ஈடுபட கூடிய அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்றும் 5 மாநிலங்களிலும் வாக்குப்பதிவு கூடுதலாக ஒரு மணி நேரம் நடத்தப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஐந்து மாநில தேர்தல் தேதிகள் முழு விவரம் பின்வருமாறு:
உத்தரபிரதேசம்: பிப்ரவரி 10, 14, 20, 23, 27, மற்றும் மார்ச் 03, 07
உத்தரகாண்ட்: பிப்ரவரி 14
பஞ்சாப்: பிப்ரவரி 14
கோவா: பிப்ரவரி 14
மணிபுபூர்: பிப்ரவரி 27 மார்ச் 3
தேர்தல் வாக்கு எண்ணிக்கை: மார்ச் 10
author avatar
seithichurul

Trending

Exit mobile version