இந்தியா

5 மாநில தேர்தல் தேதி குறித்த முழு தகவல்கள்

Published

on

தமிழகத்தில் தேர்தல் தேதி ஏப்ரல் 6-ஆம் தேதி என சற்றுமுன்னர் தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்திருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தை தவிர புதுவை, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதி குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

1. புதுவை தேர்தல் தேதி: ஏப்ரல் 6

2.கேரளாவில் தேர்தல் தேதி: ஏப்ரல் 6

3.அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 27, ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும்

4.மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6, ஏப்ரல் 10, ஏப்ரல் 17, ஏப்ரல் 22, ஏப்ரல் 26 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும்

5. தமிழகத்தில் தேர்தல் தேதி: ஏப்ரல் 6

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் புதுவையில் 30 தொகுதிகளிலும், கேரளாவில் 140 தொகுதிகளிலும் அசாமில் 126 தொகுதிகளிலும் மேற்குவங்க மாநிலத்தில் 294 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன என்றும், தேர்தல் முடியும் வரை ஆளும் அரசு, புதிய நலத் திட்டங்களை அறிவிக்கக் கூடாது என்றும், அரசு ஊழியர்களை பணியிட மாற்றம் செய்யக் கூடாது மற்றும் பதவி உயர்வும் வழங்கக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது

seithichurul

Trending

Exit mobile version