தமிழ்நாடு

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: வெற்றி பெறுவது யார்?

Published

on

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்த நிலையில் தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன. பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளிவந்த நிலையில் கிட்டத்தட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளும் ஒரே முடிவுதான் தந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில தொகுதிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கருத்துகணிப்பு குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரிகள் ஆட்சி தொடரும் என கருத்துக்கணிப்பில் தகவல். கேரளாவில் இடதுசாரிகள் 72-80; காங். அணி 58-64 இடங்களை கைப்பற்றும் எனவும், கேரளாவில் பாஜகவுக்கு 1 முதல் 5 இடங்கள் கிடைக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியை இழந்து திமுக ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்பில் தகவல்.

திமுக : 160 – 170
அதிமுக : 58 – 68
அமமுக : 4 – 6
மநீம : 0 – 2
நதக : 0

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சி தொடரும் என கருத்துக் கணிப்பில் தகவல்!

மம்தா 152 – 164
பாஜக 109 – 121

அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கின்றது.

பாஜக 75-85
காங்கிரஸ் 40-50

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்பில் தகவல்!

என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி: 16-20
காங்கிரஸ்: 11-13

seithichurul

Trending

Exit mobile version