தமிழ்நாடு

ஆகஸ்ட் 30 முதல் 5 சிறப்பு ரயில்கள்: தென்னக ரயில்வே அறிவிப்பின் முழு விபரங்கள்!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக ரயில்கள் சரியாக இயங்கவில்லை என்பதும் ஒரு சில சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கி வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்துவிட்டதை அடுத்து கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வந்தன. இந்த கோரிக்கைகளை பரிசீலனை செய்த ரயில்வே துறை அமைச்சகம் தற்போது 5 சிறப்பு ரயில்களை தமிழகம் மற்றும் கேரள மாநிலத்திற்கு இயக்க முடிவு செய்துள்ளது. இந்த ஐந்து ரயில்கள் முன்பதிவு இல்லாத ரயில்கள் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகம் மற்றும் கேரளாவில் இயக்கக்கூடிய 5 சிறப்பு ரயில்கள் குறித்த முழு விவரங்கள் இதோ:

1. மதுரை-செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயில்: மதுரையில் இருந்து வருகிற 30-ந் தேதி முதல் காலை 7.10 மணிக்கு புறப்படும் இந்த காலை 10.35 மணிக்கு செங்கோட்டை சென்றடையும் என்றும், மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 7.10 மணிக்கு மதுரை சென்றடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2. மயிலாடுதுறை-திருவாரூர்-மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இருந்து தினமும் (ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 6.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் காலை 7.45 மணிக்கு திருவாரூர் சென்றடையும். மறுமார்க்கமாக திருவாரூரில் இருந்து இரவு 8.15 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 9.15 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும்.

3. திருச்சி-காரைக்கால்-திருச்சி: திருச்சியில் இருந்து 30-ந் தேதி முதல் காலை 6.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் காலை 10.45 மணிக்கு காரைக்கால் சென்றடையும். மறுமார்க்கமாக காரைக்காலில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 7.15 மணிக்கு திருச்சி சென்றடையும்.

4. எர்ணாகுளம்- கொல்லம்: இந்த ரயில் முன்பதிவில்லா சிறப்பு ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.

5. கன்னூர்- மங்களூரூ இடையேயான முன்பதிவு இல்லாத சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.

இந்த தகவலை தென்னக ரயில்வே அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version