கிரிக்கெட்

கொரோனா வதிகளை மீறி அவுட்டிங்; 5 இந்திய வீரர்கள் 3வது டெஸ்டில் பங்கேற்பதில் சிக்கல்!

Published

on

இந்திய கிரிக்கெட் அணி, தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மிக நீண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதுவரை ஒருநாள் மற்றும் டி20 தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மட்டும் பாக்கியுள்ளன. 3வது டெஸ்ட் போட்டி வரும் 7 ஆம் தேதி, சிட்னியில் தொடங்குகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் சிலர், தொடருக்காக விதிக்கப்பட்டுள்ள ‘பயோ பபுளை’ மீறி செயல்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது.

ரோகித் சர்மா, நவ்தீப் சயினி, ரிஷப் பன்ட், சுப்மன் கில் மற்றும் பிரித்வி ஷா ஆகிய வீரர்கள், சில நாட்களுக்கு முன்னர் மெல்பர்னில் இருக்கும் உணவகம் ஒன்றுக்கு சென்று சாப்பிட்டுள்ளனர். அப்போது அவர்களைப் பார்த்த இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒருவர், அது குறித்தான வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மேலும் இந்திய வீரர்கள் சாப்பிட்ட பில்லையும் அவர் கட்டியுள்ளார். இது பற்றிய அனைத்து விவரங்களையும் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர சர்ச்சை வெடித்தது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம், தொடரில் பங்கெடுத்துள்ள வீரர்கள் கொரோனா முன்னெச்சரிக்கைகளுடன் வெளியே செல்ல அனுமதி அளித்துள்ளதே தவிர, உணவகங்களில் சாப்பிட அனுமதி அளிக்கவில்லை. இதனால், தற்போது வீடியோவில் பதிவான 5 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா இது குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளது. அந்த 5 வீரர்கள், அடுத்து வரும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version