தமிழ்நாடு

காட்பாடி தொகுதியில் 5 இயந்திரங்கள் கோளாறால் பரபரப்பு: துரைமுருகன் நிலை என்ன?

Published

on

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் திமுக வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளனர். திமுக தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு 124 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திமுக ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் திமுகவின் பெரும்பாலான வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தாலும் திமுகவின் முக்கிய வேட்பாளரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான துரைமுருகன் திடீரென பின்னடைவில் இருந்தார்.

அதன் பின் ஒரு சில சுற்றுக்கள் முடிந்த உடன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த துரைமுருகன் இருந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி காட்பாடி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஐந்து இயந்திரங்கள் கோளாறு என்ற தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர் துரைமுருகன் தற்போது 300க்கும் அதிகமான வாக்குகள் முன்னிலையில் இருக்கும்போது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தற்போது இயந்திரங்கள் சரி செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் அந்த இயந்திரங்களளில் உள்ள ஓட்டுகள் எண்ணப்படும் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version